இரணியல்: பஸ்ஸில் பர்ஸ் திருடிய பெண்கள் கும்பல்

0
12

கருங்கலில் இருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று திங்கள்சந்தை பேருந்து நிலையம் வந்தபோது, அதில் இருந்த பெண்ணின் பர்ஸ் மாயமானது. பர்ஸில் 5 ஆயிரம் ரூபாய் மற்றும் ஏடிஎம் கார்டு இருந்தன. இதற்கிடையில், 3 பெண்கள் 2 குழந்தைகளுடன் பேருந்திலிருந்து இறங்கி தப்ப முயன்றபோது, பர்ஸ் மீட்கப்பட்டது. பயணிகளால் அவர்கள் இரணியல் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில், இரு பெண்கள் மதுபோதையிலும், ஒருவர் கர்ப்பிணியாகவும் இருந்தது தெரியவந்தது. அவர்கள் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here