Home கன்னியாகுமரி செய்திகள் இரணியல்: தொழிலாளி மீது தாக்குதல் –  வழக்குப்பதிவு

இரணியல்: தொழிலாளி மீது தாக்குதல் –  வழக்குப்பதிவு

0

இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் பவுல்ராஜ் (47) கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜான் புஷ்பராஜ் (53) என்பவருக்கும் கடந்த 6-ம் தேதி இரணியிலிருந்து பஸ்ஸில் செல்லும்போது தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனிடையே பஸ்ஸில் பரிசேரி வந்து இறங்கி இரண்டு பேரும் இரவு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜான் புஷ்பராஜ் அங்கு கிடந்த ஒரு கல்லை எடுத்து பவுல்ராஜ் தலையில் அடித்தும் கையால் கன்னத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. பவுல்ராஜ் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். 

இதை அடுத்து ஜான் புஷ்பராஜ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். காயமடைந்த பவுல்ராஜை உறவினர்கள் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து இரணியல் போலீசார் ஜான் புஷ்பராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். இதே போன்று ஜான் புஷ்பராஜ் இரணியன் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் பவுல்ராஜ் நேற்று முன்தினம் 7-ம் தேதி காலை அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் புகார் கூறியுள்ளார். இரு சம்பவங்கள் குறித்தும் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version