அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபரின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

0
293

அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் மல்லசந்திரா கிராமத்தைச் சேர்ந்த ரவிஷா கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கி அதை ஓட்டிச் சென்ற ரவிஷா உயிரிழந்தார். இதையடுத்து ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரவிஷா மனைவி மற்றும் குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், ரவிஷா காரை அதிவேக​மாக​வும் கவனக்​குறை​வாக​வும் ஓட்​டிய​தாலேயே விபத்து நடந்​துள்​ளது. எனவே, இழப்​பீடு வழங்​கு​மாறு காப்​பீட்டு நிறு​வனத்​துக்கு உத்​தர​விட முடி​யாது எனக் கூறி மனுவை தள்​ளு​படி செய்​தது.

இந்த உத்​தரவை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் ரவிஷா குடும்​பத்​தினர் மேல்​முறை​யீடு செய்​தனர். இந்த மனுவை நீதிப​தி​கள் பி.எஸ்​.நரசிம்மா மற்​றும் ஆர்​.ம​காதேவன் ஆகியோர் அடங்​கிய அமர்வு விசா​ரித்​தது. விசா​ரணை​யில், ரவிஷா அதிவேக​மாக காரை ஓட்​டியது உறு​திப்​படுத்​தப்​பட்​டது. இதையடுத்து ரவிஷா குடும்​பத்​தினரின் மனுவை தள்​ளு​படி செய்​தனர்.

அதிவேக​மாக​வும் கவனக்​குறை​வாக​வும் வாக​னம் ஓட்​டு​வ​தால் உயி​ரிழக்​கும் ஓட்​டுநர்​களின் குடும்​பத்​தினருக்கு காப்​பீட்டு நிறு​வனங்​கள் இழப்​பீடு வழங்க வேண்​டிய​தில்லை என நீதிப​தி​கள்​ தெரி​வித்​தனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here