மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திர அணுகுமுறை முன்னுதாரணம்: காங். எம்.பி. சசி தரூர் பெருமிதம்

0
23

அமெரிக்​கா​வின் பிளெட்​சர் பள்​ளி​யில் நடை​பெற்ற கலந்​துரை​யாடல் ஒன்​றில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பங்கேற்றார்.

அப்போது அவர் கூறிய​தாவது: மாலத்​தீ​வில் கடந்த முறை நடை​பெற்ற அதிபர் தேர்​தலில், இந்​தி​யாவே வெளி​யேறு என்ற பிரச்சாரம் அதி​க​மாக முன்​னெடுக்​கப்​பட்​டது. அந்த பிரச்சாரத்தை முன்​னெடுத்​தவர்​தான் (முகமது முய்​சு) அங்கு அதிப​ராகப் பொறுப்​பேற்​றார். அவர் வெற்றி பெற்ற சில நாட்​களி​லேயே, இந்திய நிறு​வனங்​களுக்கு வழங்​கப்​பட்ட பல ஒப்​பந்​தங்​களை ரத்து செய்​தார்.

அவர் அதிப​ராகப் பொறுப்​பேற்ற சில மாதங்​களி​லேயே, அந்நாட்டில் கடல்​நீரைக் குடிநீ​ராக்​கும் முக்​கிய ஆலை திடீரென பழு​தானது. இதனால் ஒட்​டுமொத்த மாலத்​தீ​விலும் கடுமை​யான குடிநீர் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டது. அந்​நாட்டு மக்​களுக்​குக் குடிக்​கக் கூடத் தண்​ணீர் இல்​லாத நிலை உரு​வானது.

மாலத்​தீ​வில் இந்​திய எதிர்ப்​புப் பிரச்​சா​ரங்​கள் நடை​பெற்ற போதிலும், மத்​திய அரசு ஒரு சிறந்த அண்டை நாட்​டுத் தர்மத்தோடு நடந்​து ​கொண்​டது. இந்த இக்​கட்​டான சூழலில் இருந்து மாலத்​தீவு மீள்​வதற்​காக, இந்​தியா விமானம் மூல​மாகக் குடிநீர் அனுப்பியது.

இந்​தியா எந்​தவொரு தயக்​க​மும் காட்​டா​மல், லட்​சக் ​கணக்​கான லிட்​டர் பாட்​டில் குடிநீரை விமானத்தில் அனுப்பி அவர்​களின் உயிரைக் காப்​பாற்​றியது. அதற்​குப் பிர​திபல​னாக இந்​தியா வேறு எதை​யும் எதிர்​பார்க்​க​வில்​லை. அது ஒரு நல்ல அண்டை நாடாகச் செய்த அன்​பான உதவி அவ்​வளவு​ தான்.

இதன் பிறகு, அங்கு நிலவி வந்த இந்​தி​யாவே வெளி​யேறு என்ற தீவிரப் பிரச்​சா​ரம் கணிச​மாகத் தணிந்​தது. எனவே, தூதரக உறவுகளில் நம்​பிக்கை என்​பது செயல்​களின் மூலமே கட்டமைக்கப்​படு​கிறது. இவ்​வாறு சசி தரூர்​ கூறி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here