யு-19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமனில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது. ஆர்யா வீர் சேவக் 168 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 160 ரன்கள் வளிசினார்.
310 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் அணி 50 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் இஷான் 4 விக்கெட்களை வீழ்த்தினார். 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து இந்தியா யு-19 அணி அரை இறுதிக்கு முன்னேறியது.














