அமெரிக்க ராணுவ ரகசியங்களை திருடிய இந்திய வம்சாவளி ஆஷ்லே டெல்லிஸ் கைது: சீன அதிகாரிகளை சந்தித்தது அம்பலம் 

0
16

அமெரிக்​கா​வின் ராணுவ ரகசி​யங்​களை வைத்​திருந்​தது, சீன அதி​காரி​களை சந்​தித்​தது ஆகிய குற்​றச்​சாட்​டின் கீழ் இந்​திய வம்​சாவளியை சேர்ந்த ஆஷ்லே டெல்​லிஸ் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

64 வயதான ஆஷ்லே டெல்​லிஸ். மும்​பை​யில் பிறந்​தவர். இந்​திய வம்​சாவளி​யான அவர் அமெரிக்க ஆய்​வாளர் மற்​றும் வெளி​யுறவுக் கொள்​கை​யின் ஆலோ​சக​ராக உள்​ளார். அமெரிக்​கா​வில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் பல்​வேறு முக்​கிய பொறுப்​பு​களை வகித்​தவர் ஆஷ்லே டெல்​லிஸ் (64). முன்​னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பதவிக் காலத்​தில் தேசிய பாது​காப்பு கவுன்​சிலில் பணி​யாற்றி உள்​ளார்.

இந்​நிலை​யில், அமெரிக்க விமானப் படை தொடர்​பான ரகசிய ஆவணங்​களை பதுக்​கியது மற்​றும் ஓட்​டலில் சீன அரசு அதி​காரி​களை சந்​தித்து பேசி​யது ஆகிய குற்​றச்​சாட்​டு​களின் கீழ் ஆஷ்லே டெல்​லிஸை எப்​பிஐ அதி​காரி​கள் நேற்று கைது செய்​தனர். முன்​ன​தாக வெர்​ஜினி​யா​வில் உள்ள அவரது வீட்​டில் தீவிர சோதனை நடத்​தப்​பட்​டது. அப்​போது 1,000-க்​கும் மேற்​பட்ட அமெரிக்க ராணுவ ரகசி​யங்​கள் அடங்​கிய ஆவணங்​களை புல​னாய்​வுத் துறை அதி​காரி​கள் கைப்​பற்​றினர். அமெரிக்க பாது​காப்​புத் துறை மற்​றும் வெளி​யுறவுத் துறை அலு​வல​கங்​களில் இருந்த ரகசிய ஆவணங்​களை எடுத்துச் சென்றுள்ளார் என்று எப்​பிஐ புல​னாய்​வுத் துறை சிறப்பு ஏஜென்ட் ஜெப்ரி ஸ்காட் நீதி​மன்​றத்​தில் தெரி​வித்​தார்.

மேலும், கடந்த 2002-ம் ஆண்டு செப்​டம்​பர் முதல் 2025-ம் ஆண்டு செப்​டம்​பர் வரை வெர்​ஜினி​யா​வில் உள்ள பிரபல ஓட்​டலில் சீன அதி​காரி​களை ஆஷ்லே டெல்​லிஸ் சந்​தித்து பேசி​யதும் கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக தீவிர விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. ஆஷ்லே மீதான குற்​றம் நிரூபிக்​கப்​பட்​டால் 10 ஆண்டு சிறை தண்​டனை​யும்​ அபராத​மும்​ விதிக்​கப்​படும்.​

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here