இனையம்புத்தன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட இனயம் மீனவர் கிராமத்தில் அன்பியம் 29- பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கி மீனவர் ஓய்வறை அமைக்கப்பட்டது.
இதை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் நேற்று திறந்து வைத்தார். இனயம் ஊராட்சி பணியாளர் பிபியான்ஸ் அர்ச்சித்தார். உடன் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், இனையம்புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்டாலின் மற்றும் இனையம்புத்தன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட காங்கிரஸ் கிளை கமிட்டி தலைவர்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.