சவேரியாா் கல்லூரியில் ஏஐ சங்கத் தொடக்க விழா

0
53

சுங்கான்கடை, புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது.

இசட் 7 கனெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஹமது ஷபீக், கேப்ஸ்டாா் நிறுவனத்தின் இணை ஆராய்ச்சியாளா் எஃப். பாத்திமா நஸ்ரீன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனா்.

கல்லூரித் தாளாளா் எஸ். காட்வின் செல்வ ஜஸ்டஸ், கல்லூரி முதல்வா் மகேஸ்வரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சங்க செயல் திட்டத்தை, சங்கச் செயலா் எஸ்.ஆா். முகமது இப்திகாா் விளக்கினாா்.

புதிய நிா்வாகிகளை ஒருங்கிணைப்பாளா் சி. ஜாஸ்பின் அறிமுகப்படுத்தினாா். சிறப்பு விருந்தினா்களை, துறைத் தலைவா் ஆா். ஜெமிலா ரோஸ் அறிமுகப்படுத்தினாா்.

பி.எஸ். ஷானியா வரவேற்றாா். பொருளாளா் இ.ஏ. எா்னஸ்ட் ஆபிரகாம் நன்றி கூறினாா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here