“அரசியலில் மக்களின் நம்பிக்கையை பெறுவது கடினம், இழப்பது எளிது” – பிரதமர் மோடி

0
22

அரசி​யலில் மக்​களின் நம்​பிக்​கை​யைப் பெறு​வது கடினம், ஆனால் அதை இழப்​பது மிக​வும் எளிது என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​தார்.

தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யைச் (என்​டிஏ) சேர்ந்த 37 பாஜக எம்.பி.க்​கள் பிரதமர் மோடியை டெல்​லி​யில் நேற்று சந்​தித்​தனர். அப்​போது பிரதமர் மோடி அவர்​களு​டன் காலை உணவு சாப்பிட்டார். நிகழ்ச்​சி​யில் பாஜக தேசிய தலை​வர் நிதின் நவீன், முதன்​முறை​யாகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பாஜக எம்​.பி.க்​கள், திரிண​மூல் காங்​கிரஸ் உள்​ளிட்ட பிற கட்​சிகளி​லிருந்து பாஜகவில் இணைந்த எம்.பி.க்​கள் பலர் கலந்​து​கொண்​டனர்.

இந்​தக் கூட்​டத்​தில் புதிய எம்​.பி.க்​களுக்கு அறி​வுரை வழங்கி பிரதமர் மோடி பேசி​ய​தாவது: பொது வாழ்க்​கை​யில் எழும் ஆபத்துகள் மற்​றும் தவறான பழக்​கவழக்​கங்​களை புதிய எம்.பி.க்கள் தெரிந்து கொள்​ளவேண்​டும். பொது​வாழ்​வில் இருக்கும்​போது மிகச் சிறிய தவறு கூட பெரிய பிரச்​சினை​யாக மாறக்கூடும். தேவையற்ற அல்​லது சந்​தேகத்​துக்​குரிய நபர்​களின் உபசரிப்​பு​களை ஏற்​கக் கூடாது.

புதிய எம்​.பி.க்​கள் தங்​களது அதி​காரப்​பூர்வ லெட்​டர்​பேட் மற்​றும் கையொப்​பங்​கள் தவறான நபர்​களின் கரங்​களுக்​குச் சென்றுவிடா​மல் மிக​வும் கவன​மாகப் பாது​காத்​துக் கொள்ள வேண்​டும். பொது​வாழ்​வில் தூய்​மை​யைக் கடைப்பிடிக்கவேண்டும். பொது​மக்​களுக்கு சேவை செய்​யவே நாம் வந்​துள்​ளோம். தொகுதி மக்​களின் குறை​களை செவிகொடுத்து கேளுங்​கள்.

அரசி​யலில் மக்​களின் நம்​பிக்​கை​யைப் பெறு​வது கடினம், ஆனால் அதை இழப்​பது மிக​வும் எளிது. பொது​மக்​கள் மற்​றும் இளைஞர்​களு​டன் எப்​போதும் தொடர்​பில் இருக்க வேண்​டும். இளைஞர்​களின் பிரச்​சினை​களை​யும் கருத்​துகளை​யும் பொறுமை​யுடன் கேட்​டறிந்​தால் மட்​டுமே சரி​யான தீர்​வு​களை நாம் காண முடி​யும். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here