Home கன்னியாகுமரி செய்திகள் பார்வதிபுரத்தில் கஞ்சா வைத்திருந்த ஐ. டி. ஊழியர் கைது

பார்வதிபுரத்தில் கஞ்சா வைத்திருந்த ஐ. டி. ஊழியர் கைது

0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் பார்வதிபுரம் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த ஐ. டி. ஊழியரான முகமது அஸ்லாம் யூசுப் (வயது 25) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து. அவரிடம் இருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து முகமது அஸ்லாம் யூசுப்பை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது வங்கி கணக்கும் முடக்கப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version