Home உலக செய்திகள் “நானே வெனிசுலாவின் தற்காலிக அதிபர்” – ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் ட்ரம்ப் அறிவிப்பு

“நானே வெனிசுலாவின் தற்காலிக அதிபர்” – ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் ட்ரம்ப் அறிவிப்பு

0

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக ஊடகத் தளமான ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் தன்னை வெனிசுலாவின் தற்காலிக அதிபர் மற்றும் அமெரிக்காவின் 45 மற்றும் 47-வது அதிபர் என குறிப்பிட்டு தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்துகிறார் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. வெனிசுலா மீது திடீர் தாக்குதல் நடத்தி அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்கா கொண்டு வந்தது. அவர்கள் அமெரிக்க நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகின்றனர்.

வெனிசுலாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் கச்சா எண்ணெய் எடுப்பதில் தீவிரம் காட்டி வரும் அதிபர் ட்ரம்ப் தனது சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு, அதற்கு கீழே வெனிசுலா தற்காலிக அதிபர் மற்றும் அமெரிக்காவின் 45 மற்றும் 47-வது அதிபர் என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version