கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு வடிவீஸ்வரத்தைச் சேர்ந்தவர் பாபு, இவர் மனைவி மஞ்சு(26). இவர்களிடையே குடும்ப பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் மனைவி மஞ்சுவை பாபு ஆபாசமாக பேசி, காலால் வயிற்றில் மிதித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மஞ்சு கொடுத்த புகாரின் பேரில், கோட்டாறு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.