Home சினிமா செய்திகள் ‘ஜெயிலர் 2’ முதல் சிங்கிள் எப்படி? – ரஜினி ரசிகர்களை கவரும் அனிருத் மாயம்

‘ஜெயிலர் 2’ முதல் சிங்கிள் எப்படி? – ரஜினி ரசிகர்களை கவரும் அனிருத் மாயம்

0

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிளான ‘அலே போலெலோ’ பாடல் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் தலைப்பின் ப்ரமோ இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் முழு பாடலையும் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

‘அலே போலெலோ’ எனத் தொடங்கும் அந்தப் பாடலை அனிருத் இசையமைத்து பாடி இருக்கிறார். கேரள கலாச்சார பின்னணியில் பாடல் படமாக்கப்படுள்ளது.

ஆ… அக்கம்பல போலே.. என அனிருத்தின் குரலில் தொடங்கும் பாடல், ‘அலே போலெலோ’ என அதன் தலைப்பைத் தொடும்போது உச்சம் பெரும் இசை பாடலுடன் இணைந்து நம்மையும் துள்ள வைக்கிறது. மலையாளம் போல பாடல் தொடங்கினாலும் பிறகு நல்ல தமிழுக்கு மாறிவிடுகிறது.

இந்தக் குத்தாட்ட பாடலில் ரஜினி கொண்டாட்டத்தில் பங்கேற்காமல் ஏதோ ஒரு ரகசியத்தை கண்டுபிடிக்க வந்தவர் போல தன் பாணியில் வேடிக்கை மட்டும் பார்க்கிறார்.

கேரள பின்னணி அரங்க அமைப்பு, அந்த கலாச்சாரத்துக்குரிய வெள்ளை புடவை என வரும் பூர்ணாவின் நடனம் ரசிக்க வைக்கிறது.

கேட்கும்போது நம்மைத் துள்ள வைக்கும் இந்த ‘அலே போலெலோ’ ரஜினி ரசிகர்களுக்கான அனிருத்தின் மாயம்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர். படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version