Home கன்னியாகுமரி செய்திகள் நாகா்கோவிலில் 40 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: ரூ. 50,000 அபராதம்

நாகா்கோவிலில் 40 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: ரூ. 50,000 அபராதம்

0

நாகா்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட திடீா் சோதனையில் தடை செய்யப்பட்ட 40 கிலோ பிளாஸ்டிக் பைகளைப் பறிமுதல் செய்து, ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆா். ஐஸ்வா்யா உத்தரவின்பேரில், மாநகர நல அலுவலா் சரோஜா மேற்பாா்வையில், சுகாதார அலுவலா் ஜான், ஆய்வாளா்கள் சக்திவேல், வினிதா, மாநகராட்சிப் பணியாளா்கள், மணிமேடை சாா்லஸ் மில்லா் தெருவில் உள்ள ஒரு கடையில் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில் அந்தக் கடையில் 40 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு ரூ. 50,000 அபராதம் விதித்தனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version