Home தேசிய செய்திகள் ஆந்திராவில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஆந்திராவில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களிலும், குண்டூர், தெனாலி, விஜயவாடா, அமராவதி மற்றும் கோதாவரி ஆகிய மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் பல நீர் நிலைகள் நிரம்பி தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று, மழைக்கு மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன.

பல ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நாசமாயின. தொடர் கனமழையால் கடலோர ஆந்திராவில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. மீட்பு மற்றும் உதவி பணிகள் குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகளிடம் முதல்வர் சந்திரபாபு நாயுடு காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version