Home உலக செய்திகள் “அமைதி நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் இருக்கிறது. ஆனால்” – ட்ரம்ப் ஆதங்கம்

“அமைதி நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் இருக்கிறது. ஆனால்” – ட்ரம்ப் ஆதங்கம்

0

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால் அது தனக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே,” என்று ஆதங்த்துடன் கூறியுள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசை நார்வே நோபல் குழு நாளை (அக்டோபர் 9, 2026) அறிவிக்க உள்ள நிலையில் ட்ரம்ப் இவ்வாறாகக் கூறியுள்ளார்.

இது குறித்து ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப். “2026 விருது குறித்து நோபல் விருதுக் குழுவினர் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. என்னைப் போன்றவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்குவதில்லை என்ற பெயர் அவர்களுக்கு உண்டு என நினைக்கிறேன்.

ஆனால், கடந்த ஆண்டு அதை நான் மறைமுகமாகப் பெற்றதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சிதான். வெனிசுலா நாட்டின் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ எனக்கு அவர் பெற்ற நோபல் பரிசை சமர்ப்பணம் செய்தார். 8 போர்களை நிறுத்தியதைவிட வேறு என்ன தகுதி வேண்டும்?” என்று விமர்சித்துள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசானது நாடுகளுக்கு இடையேயான சகோதரத்துவத்தைப் பேணிய / ராணுவ மோதல்களை நிறுத்திய அல்லது கட்டுப்படுத்திய / அமைதி மாநாடுகளை நடத்திய, ஊக்குவித்த தனிநபர் அல்லது இயக்கங்களுக்கு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 8 போர்களை தான் நிறுத்தியுள்ளதால் நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

இந்த ஆண்டு அவருக்கு ஆதரவாக போப் லியோ, சர்வதேச நீதிமன்றம், பாலஸ்தீனிய பிரதேசங்களில் மனித உரிமைகளின் நிலை குறித்த ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் ஆகியோர் பரிந்துரைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், பொருளா​தா​ரம் மற்​றும் உலக அமை​திக்​காக பாடுபட்டோருக்கு ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 2026-ம் ஆண்​டுக்​கான நோபல் பரிசுகளை பெறுபவர்​களின் பெயர்​கள் அறிவிக்​கப்​பட்டு வருகின்றன. மருத்​து​வம், இயற்​பியல், வேதியியல் மற்றும் இலக்கியத் துறை​களுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்​பட்டுவிட்​டன. நாளை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version