சீன உளவாளி சர்ச்சையால் பதவியிலிருந்து விலகிய ஜென்சென் ஹுவாங் மீண்டும் என்விடியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) நியமிக்கப்பட்டுள்ளார்.
சீன உளவுப் பிரிவுடன் தொடர்புடைய பெண்ணுடனான உறவு மற்றும் தனிப்பட்ட சர்ச்சைகள் காரணமாக ஜென்சென் ஹுவாங் கடந்த 11 நாட்களுக்கு முன்பாக என்விடியா நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அவரது ராஜினாமாவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், முந்தைய முடிவை திரும்பப் பெற்றுள்ள இயக்குநர் குழு, என்விடியா நிறுவனத்தின் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் இயக்குநர் குழு உறுப்பினராக ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் நியமித்துள்ளது.
