Home மாநில செய்திகள் சபரிமலை வனப்பகுதியில் யானைகளிடமிருந்து பக்தர்களை காப்பாற்ற துப்பாக்கி, பட்டாசுகள் தயார்

சபரிமலை வனப்பகுதியில் யானைகளிடமிருந்து பக்தர்களை காப்பாற்ற துப்பாக்கி, பட்டாசுகள் தயார்

0

சபரிமலை வனப்​பகுதி​யில் நடந்து செல்​லும் பக்​தர்​களை யானைகளிடம் இருந்து காப்​பாற்ற துப்​பாக்​கி​கள், பட்​டாசுகள் உள்​ளிட்​ட​வற்றை தயார் நிலை​யில் வைத்​திருப்​ப​தாக, சன்​னிதான சரக வன அலு​வலர் டி.கே.மனோஜ் தெரி​வித்​துள்​ளார்.

சபரிமலையில் மண்​டல காலம் தொடங்​கியதில் இருந்து இது​வரை சன்​னிதானம் மற்​றும் சுற்​றுப்​பகுதி​யில் 40 பாம்​பு​கள் பிடிக்​கப்​பட்டு, 3 கி.மீ. தொலை​வில் உள்ள அம்​பலக்​கடவு வனத்​தில் விடப்​பட்​டுள்​ளன.

இது​குறித்து சன்​னிதான சரக வன அலு​வலர் டி.கே.மனோஜ் கூறிய​தாவது: பாம்​பு​களைப் பிடிக்க 3 குழுக்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இரண்டு குழுக்​கள் சன்​னிதானத்​திலும், ஒன்று மரக்​கூட்​டத்​திலும் முகாமிட்​டுள்​ளன. பாண்​டித்​தவளம், உரல்​குழி, புல்​லுமேடு மலை​யேற்​றப் பாதை மற்​றும் சாரல்​மேடு ஆகிய 4 இடங்​களில் 24 மணி நேர ரோந்து பணி நடை​பெற்று வரு​கிறது.

யானைகளை விரட்​டுவதற்​காக 5 பேர் கொண்ட குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தக் குழு​விடம் 2 பம்ப் ஆக் ஷன் துப்​பாக்​கி​கள் உள்​ளன. மேலும், பட்​டாசுகளும் இருப்பு வைக்​கப்​பட்டு பயன்​படுத்​தப்​படு​கின்​றன. யானை இந்த சப்​தத்தை கேட்டு விலகி ஓடி​விடும். இவ்​வாறு அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version