Home மாநில செய்திகள் தஞ்சையில் தண்ணீரின்றி கருகி வரும் சம்பா, தாளடி நெற்பயிர்கள்

தஞ்சையில் தண்ணீரின்றி கருகி வரும் சம்பா, தாளடி நெற்பயிர்கள்

0

தஞ்​சாவூர் மாவட்​டத்​தில் தண்​ணீரின்றி சம்பா, தாளடி நெற்பயிர்கள் காய்ந்து கருகி வரு​வ​தால், ஏக்​கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்​கக் கோரி வயல்​களில் இறங்கி விவசாயிகள் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடத்​தினர்.

தஞ்​சாவூர் மாவட்​டத்​தில் காவிரி நீர் கிடைக்​காததால் சம்பா மற்​றும் தாளடி சாகுபடி செய்​துள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

குறிப்​பாக அம்​மாப்பேட்டை, புத்​தூர், நெடுவாசல் உள்​ளிட்ட மாவட்​டத்​தின் பல்​வேறு பகுதி​களில் சம்பா மற்​றும் தாளடி நெற்​பயிர்​கள் வளர்ந்து, சூல் பிடிக்​கும் பரு​வத்​தில் போதிய தண்​ணீரின்றி காய்ந்து கருகி வரு​கின்​றன.

வயல்​களில் தண்​ணீர் இல்​லாததால் நிலங்​கள் ஆங்​காங்கே வெடித்​துக் காணப்​படு​கின்​றன. இத​னால் சம்பா, தாளடி சாகுபடிக்​காக விவசாயிகள் செய்​துள்ள முதலீடுகள் அனைத்​தும் வீணாகும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.

காவிரி டெல்​டாவின் முக்​கிய வாழ்​வாதா​ர​மான சம்பா மற்​றும் தாளடி சாகுபடி தண்​ணீரின்றி பாதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், விவசாயிகளைக் காப்​பாற்ற தமிழக அரசு உரிய நட​வடிக்கை எடுக்​க​வில்லை என்​றுகூறி, அதைக் கண்​டித்து தமிழ்​நாடு விவசாயிகள் சங்​கத்​தின்(இந்​திய கம்​யூனிஸ்ட் சார்பு) தஞ்​சாவூர் மாவட்ட துணைச் செய​லா​ளர் ஆர்.செந்​தில்​குமார் தலை​மையில் விவசாயிகள் நேற்று அம்​மாப்​பேட்​டை​யில் காய்ந்து கரு​கிய சம்பா, தாளடி வயல்​களில் இறங்கி ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, பாதிக்​கப்​பட்ட நெற்​பயிர்​களுக்கு ஏக்​கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்​டும். காவிரி டெல்டா பகுதி​களில் பாதிக்​கப்​பட்ட இடங்​களை வறட்சி பாதித்த பகுதி​களாக அறி​வித்து உரிய நிவாரணத் திட்​டங்​களைச் செயல்​படுத்த வேண்​டும்.

விவசாயிகளுக்கு மாற்​றுப் பாசன வசதி​களை ஏற்​படுத்தி, தேவை​யான இடங்​களில் மின்​சா​ரம் மற்​றும் பாசன நீர் தடை​யின்றி கிடைக்க நட​வடிக்கை எடுக்க வேண்​டும். பயிர்க் காப்​பீடு செய்​துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்​பீடு கிடைக்க நட​வடிக்கை எடுக்க வேண்​டும்.

விவசாயத் தொழிலா​ளர்​களின் வாழ்​வாதா​ரத்​தைப் பாது​காக்​கும் வகை​யில் உரிய நிவாரண உதவி​களை வழங்க வேண்​டும் என தமிழக அரசை வலியுறுத்தி முழக்​கங்​கள் எழுப்​பப்​பட்​டன.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் நேற்று தண்ணீரின்றி காய்ந்து கருகிய சம்பா, தாளடி வயல்களில் இறங்கி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

இதேபோல, நாகை மாவட்​டம் திரு​மருகல் ஒன்​றியத்​தில் மூன்று போக சாகுபடி செய்து வந்த விவசாயிகள் தற்​போது முறை​யாக தண்​ணீர் கிடைக்​காததால் சம்பா சாகுபடியை மட்​டுமே மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

இந்த ஆண்டு ஏக்​கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி பணிகளை மேற்​கொண்ட நிலை​யில், தற்​போது நெற்​பயிர்​கள் நீரின்றி கருகி வரு​கின்​றன.

எனவே, அரசு தண்​ணீர் பாய்ச்ச மானியத்​தில் மோட்​டார் வழங்க வேண்​டும். விவசாயிகளுக்கு டீசல் மானியம் மற்​றும் மும்​முனை மின்​சா​ரம் கிடைக்க நட​வடிக்கை எடுக்க வேண்​டும். தண்​ணீர் இன்றி பாதிக்​கப்​படும் அனைத்து விவசாயிகளுக்​கும் நிவாரணம் வழங்க வேண்​டும் என இப்​பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version