Home மாநில செய்திகள் மதுரை நகைக்கடை கொள்ளை எதிரொலி: நகைக்கடை உரிமையாளர்களுடன் செங்கல்பட்டு எஸ்.பி. ஆலோசனை

மதுரை நகைக்கடை கொள்ளை எதிரொலி: நகைக்கடை உரிமையாளர்களுடன் செங்கல்பட்டு எஸ்.பி. ஆலோசனை

0

மதுரையில் பிரபல நகைக்​கடை​யில் பல கோடி ரூபாய் மதிப்​பிலான நகைகள் கொள்​ளை​யடிக்​கப்​பட்ட சம்​பவத்​தைத் தொடர்ந்து, செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் நகைக்​கடைகளில் திருட்டு, கொள்​ளைச் சம்​பவங்​களை தடுப்​ப​தற்​கான முன்​னெச்​சரிக்கை நட​வடிக்​கைகள் குறித்து நகைக்​கடை உரிமையாளர்​களு​டன் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அய்​மன் ஜமால் ஆலோ​சனை நடத்​தினார்.

அப்​போது அனைத்து நகைக்​கடைகளி​லும் உயர்​தர கண்​காணிப்பு கேம​ராக்​களைப் பொருத்த வேண்​டும். கடை​யின் முன்​புறம் மட்​டுமின்றி பின்​புறம், நுழைவாயில் மற்​றும் வெளியேறும் பகுதி​களி​லும் கண்​காணிப்பு கேம​ராக்​களை பொருத்தி, அவை தொடர்ந்து செயல்​படுவதை உறுதி செய்ய வேண்​டும். கேம​ராக்​களில் பதிவாகும் காட்​சிகளை குறிப்​பிட்ட காலத்​துக்கு பாது​காப்​பாகச் சேமித்து வைக்க வேண்​டும்.

கடைகளில் நவீன எச்​சரிக்கை அலாரம், சென்​சார் கரு​வி​கள், அவசர காலங்​களில் போலீ​ஸாருக்கு தகவல் தெரி​விக்​கும் வசதி ஆகிய​வற்றை ஏற்​படுத்த வேண்​டும். நகைகளைப் பாது​காப்​பாக வைப்​ப​தற்​கான லாக்​கர் வசதி​களை மேம்​படுத்​து​வதுடன், இரவு நேரங்​களில் பாது​காப்​புப் பணி​யாளர்​களை நியமிக்க வேண்​டும்.

அலட்சியம் வேண்டாம்

கடைகளில் புதிதாகப் பணி​யில் சேர்க்​கப்​படும் ஊழியர்​களின் பின்​னணியை முறை​யாகச் சரிபார்க்க வேண்​டும். கடைக்கு வரும் சந்​தேகத்​துக்​கிட​மான நபர்​களின் நட​மாட்​டத்​தைக் கண்​காணிக்க வேண்​டும். கடையைத் திறக்​கும்​போதும், மூடும்​போதும் உரிய பாது​காப்பு நடைமுறைகளைப் பின்​பற்ற வேண்​டும்.

ஏதேனும் சந்​தேகத்​துக்​கிட​மான சம்​பவங்​கள் அல்​லது நபர்​களின் நட​மாட்​டம் தென்​பட்​டால் உடனடி​யாக காவல் துறைக்​குத் தகவல் தெரி​விக்க வேண்​டும். நகைக்​கடைகளின் பாது​காப்​பில் உரிமையாளர்​கள் அலட்​சி​யம் காட்​டா​மல், காவல் துறையுடன் இணைந்து செயல்​பட வேண்​டும் என்று அறி​வுறுத்​தப்​பட்​டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version