சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடத்தப்பட்ட சிறுமி ஆட்டோ ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் மீட்பு

0
21

சென்ட்​ரல் நிலை​யம் அருகே பெற்​றோருடன் தூங்​கிக் கொண்​டிருந்த ஜார்​க்கண்ட் மாநில சிறுமியை கடத்​திச் சென்ற பெயின்ட்​டரை, ஆட்டோ ஓட்​டுநர் சாமர்த்​தி​ய​மாக தடுத்து நிறுத்​தி​ய​தால், போலீ​ஸார் சிறுமியை பத்​திர​மாக மீட்டு பெற்​றோரிடம் ஒப்​படைத்​தனர்.

ஜார்​க்கண்ட் மாநிலத்​தைச் சேர்ந்​தவர் ஷனிஜல் தாஸ் (56). இவர் தனது மனைவி மற்​றும் 2 குழந்​தைகளு​டன் திருச்​சி​யில் தங்கி விவ​சா​யத்தில் ஈடு​பட்டு வரு​கிறார். இவர் குடும்​பத்​தினருடன் சொந்த ஊருக்கு செல்​வதற்​காக, சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​துக்கு வந்​திருந்​தார்.

ரயில் புறப்​படும் நேரம் வரை சென்ட்​ரல் புறநகர் ரயில் நிலை​யம் அருகே உள்ள பிளாட்​பாரத்​தில் குடும்​பத்​தினருடன் தூங்​கிக் கொண்​டிருந்​தார். நேற்று அதி​காலை 3 மணி அளவில் அங்கு வந்த மர்ம நபர், தூங்​கிக் கொண்​டிருந்த 8 வயது சிறுமியை தோளில் தூக்​கிக்​கொண்டு வால்​டாக்ஸ் சாலை நோக்கி நடந்து சென்​றுள்​ளார்.

இதைப் பார்த்து சந்​தேகமடைந்த அந்த வழி​யாக சென்ற ஆட்டோ ஓட்​டுநர், அந்த நபரிடம் விசா​ரித்​தார். அப்​போது, அந்த நபர் தமிழில் பதிலளித்த நிலை​யில், குழந்தை இந்​தி​யில் பேசி​யதோடு, அழவும் செய்​துள்​ளது.

இதனால், சந்​தேகம் அதி​கரித்​தது. சுதா​ரித்​துக் கொண்ட ஆட்டோ ஓட்​டுநர், உடனடி​யாக இதுகுறித்து யானைக்​க​வுனி போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தார்.

தகவலின் பேரில் போலீ​ஸார் விரைந்து வந்து விசா​ரித்​தனர். இதில், சிறுமி கடத்திச் செல்​லப்​பட்​டது உறுதி செய்​யப்பட்​டது.

இதையடுத்​து, சிறுமியை மீட்​டு, கடத்​திச் சென்ற நபரை பிடித்து பெரியமேடு காவல் நிலை​யம் கொண்டு சென்​றனர். விசா​ரணை​யில், சிறுமியை கடத்​தி​ய​வர் திரு​வள்​ளூர் மாவட்​டம், பொன்​னேரியைச் சேர்ந்த பெயின்ட்​டர் சசிகு​மார் (42) என்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, அவரை போலீ​ஸார் கைது செய்​தனர். சிறுமி பெற்​றோரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டார்.

ஆட்டோ ஓட்​டுநரின் சாமர்த்​தி​யம் மற்​றும் போலீ​ஸாரின் துரித நடவடிக்​கை​யால் கடத்தி செல்​லப்​பட்ட சிறுமி அரை மணி நேரத்​தில் மீட்​கப்​பட்​டார்.

இதனால், நெகிழ்ச்​சி​யடைந்த சிறுமி​யின் பெற்​றோர், குழந்​தையை விரைந்து மீட்​டுக் கொடுத்த போலீ​ஸாருக்​கும், தகவல் தெரி​வித்து உதவிய பெரியமேட்​டைச் சேர்ந்​த ஆட்டோ ஓட்​டுநர் முரு​க​னுக்​கும்​ நன்​றி தெரி​வித்​தனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here