கொலை வழக்கில் தொடா்புடைய குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த அதுல் (29) என்பவரை கொலை செய்த வழக்கில் தொடா்புடைய நாகா்கோவில் சிறையில் உள்ள கல்லுகெட்டி பகுதியைச் சோ்ந்தஅஜித் (23), புளியாரவிளையைச் சோ்ந்த பிரவீன் (31), பம்மம் பகுதியைச் சோ்ந்த சையது அலி (29) மற்றும், உண்ணாமலைகடை பகுதியைச் சோ்ந்த நிதிஷ் (24) ஆகிய 4 போ் மீதும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா்கள் 4 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனா்.















