ENG vs SL 2-வது டெஸ்ட் | இங்கிலாந்து அணி தடுமாற்றம்

0
286

இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பீல்டிங்கைதேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. டான் லாரன்ஸ் 9, கேப்டன் ஆலி போப் 1, பென் டக்கெட் 40, ஹாரி புரூக் 33, ஜேமி ஸ்மித் 21 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தேனீர் இடைவேளையில் இங்கிலாந்து அணி 53 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 80, கிறிஸ் வோக்ஸ் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் அஷிதா பெர்னாண்டோ 2 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here