ஈரானை விட்டு உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

0
164

ஈரானில் பதற்றம் அதிகரித்திருப்பதால் அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெஹரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த ஜனவரி 5-ம் தேதி இந்திய அரசு வெளியிட்ட ஆலோசனையின் தொடர்ச்சியாக இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. ஈரானில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள் முதலானோர் வணிக விமானங்கள் உள்ளிட்ட கிடைக்கக் கூடிய போக்குவரத்து வழிகள் மூலம் ஈரானை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு கடந்த ஜனவரி 14-ம் தேதி தெரிவிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன. அனைத்து இந்திய குடிமக்களும், இந்திய தகவல் தொடர்பு அதிகாரிகளும் உரிய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். அவசர தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள உள்ளூர் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும்.

தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தை, +989128109115; +989128109109; +989128109102; +989932179359 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் cons.tehran@mea.gov.in என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

ஈரானில் இருக்கும் இந்தியர்களில் யாரேனும் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யாமல் இருந்தால், அவர்கள் meaers.com/request/home என்ற இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த இணைப்பு இந்திய தூதரக இணையதளத்திலும் உள்ளது.

ஈரானில் இணைய தடைகள் காரணமாக இங்குள்ள இந்தியர்களால் பதிவு செய்ய முடியாவிட்டால், இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் அவர்களுக்காக பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, இஸ்ரேல் தீவிரம்:

இதனிடையே, ஈரான் மீது மிகப் பெரிய தாக்​குதல் நடத்த அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் தயா​ராகி வரு​வ​தாக தகவல்கள் தெரிவிக்​கின்​றன. ஈரான் அருகே யுஎஸ்​எஸ் ஆபிர​காம் லிங்​கன் விமானம் தாங்கி போர்க்​கப்​பல் தனது துணைப் போர்க் கப்​பல்​களு​டன் தயார் நிலை​யில் உள்ளது. இந்​நிலை​யில் யுஎஸ்​எஸ் ஜெரால்ட் ஆர்ஃபோர்ட் போர்க் கப்​பலும் மத்​திய கிழக்கு நோக்கி அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்கா போர்த் தளவாடங்​களை மத்​திய கிழக்கு பகுதி​யில் குவித்​துள்​ளது. இது மிகப் பெரிய தாக்குதலுக்கு அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் தயா​ராகி வருவது போல் தெரி​கிறது. இந்த தாக்​குதல் சில வாரங்​கள்​ தொடரலாம்​ என​ கூறப்படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here