Home உலக செய்திகள் உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரராக இருந்தும் 400 சதுர அடி வீட்டில் வசிக்கும் எலான் மஸ்க்

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரராக இருந்தும் 400 சதுர அடி வீட்டில் வசிக்கும் எலான் மஸ்க்

0

ஸ்பேஸ் எக்​ஸ், டெஸ்​லா, நியூரோ லிங்க், தி போரிங் கம்​பெனி, எக்ஸ் ஏஐ, எக்ஸ் வலை​தளம் உள்​ளிட்ட பல நிறுவனங்களை உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள எலான் மஸ்க் நடத்தி வரு​கிறார்.

அவரது சொத்து மதிப்பு ரூ.95 லட்​சம் கோடி​யாக உள்​ளது. உலகின் மிகப்​பெரிய கோடீஸ்​வர​ராக இருந்​தும் அமெரிக்​கா​வின் டெக்சாஸில் உள்ள போகா சிகா பகு​தி​யில் உள்ள 400 சதுர அடி வீட்​டில் வசிக்கிறார். அந்த வீட்டில் ஒரு வரவேற்​பறை, சமையல் அறை, குளியல் அறை, படுக்கை அறை மட்​டுமே உள்​ளது.

பெரும்​பாலான நாட்​கள் எலான் மஸ்க் தனது தொழிற்சாலைகளின் வளாகங்​களி​லேயே தூங்​கு​கிறார். கனடா எழுத்தாளர் ஜஸ்​டின் வில்​சன், பிரிட்​டிஷ் நடிகை தலுலா ரிலே ஆகியோரை எலான் மஸ்க் அடுத்​தடுத்து திரு​மணம் செய்​தார். இரு​வரை​யும் விவாகரத்து செய்த பிறகு அவர் மறுமணம் செய்து கொள்​ள​வில்​லை.

தற்​போது நியூரோலிங்க் தலைமை செயல் அதி​காரி ஷிவோன் உடன் மஸ்க் வாழ்ந்து வரு​கிறார். எலான் மஸ்​குக்கு மொத்​தம் 14 பிள்​ளை​கள் உள்​ளனர். முன்​னாள் மனை​வி​கள், பிள்​ளை​களுக்கு ஆடம்பர பங்​களாக்​களை மஸ்க் கட்​டிக் கொடுத்​துள்​ளார். ஆனால் அவர் மட்​டும் மிக​வும் எளிமை​யாக வாழ்ந்​து வரு​கிறார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version