Home தேசிய செய்திகள் டைப்-2 வகை நீரிழிவு நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47 சதவீதம் அதிகரிப்பு

டைப்-2 வகை நீரிழிவு நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47 சதவீதம் அதிகரிப்பு

0

நாட்டில் நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். குறிப்பாக தற்போது டைப்-2 வகை நீரிழிவு நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

டைப்-2 வகை நீரிழிவு நோய் என்பது உடலால் இன்சுலினைச் சரியாகப் பயன்படுத்த முடியாத நிலை (இன்சுலின் எதிர்ப்பு) அல்லது போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத நிலை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுவே நீரிழிவு நோயின் மிகவும் பொதுவான வகை என்று அறியப்படுகிறது. இந்த வகை நோயால் பாதிக்கப்படுபவர்கள் வழக்கத்தை விட அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், காரணமற்ற சோர்வு, மங்கலான பார்வை, ஆறாத காயங்கள், தோல் தொற்று, எடை இழப்பு போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுவார்கள்.

இந்நிலையில் டைப்-2 வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் பெண்கள் குறித்த ஆய்வை டயாபடீஸ் யுகே அமைப்பு நடத்தியது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 40 வயதுக்குட்பட்ட பெண்களிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில் குறிப்பிட்ட காலத்தில் இந்த நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை 47% அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல் 40 முதல் 79 வயதுக்குட்பட்ட பெண்களிடையே இந்த நோய் பாதிப்பு 22% மட்டுமே அதிகரித்துள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு தற்காலிகமாக ஏற்படும் ‘கர்ப்ப கால நீரிழிவு நோய்’ ஒரு முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

பொதுவாகப் பிரசவத்துக்குப் பிறகு இது மறைந்துவிட்டாலும், இந்நிலை ஏற்பட்ட பெண்களுக்குப் பிற்காலத்தில் நிரந்தரமான வகை-2 நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version