முதல்வர் வருகையை ஒட்டி மதுராந்தகத்தில் ட்ரோன் பறக்க தடை

0
27

அக்​.2-ம் தேதி மது​ராந்​தகம் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் நடை​பெறும் சாலைப் பேரணி நிகழ்ச்​சி​யில் முதல்​வர் பங்​கேற்க உள்​ளதை முன்​னிட்​டு, பாது​காப்பு காரணங்​களுக்​காக மது​ராந்​தகம் தொகு​தி​யில் குறிப்​பிட்ட பகு​தி​களில் ட்ரோன் உள்​ளிட்​டவை பறக்க மாவட்ட நிர்​வாகம் தடை விதித்​துள்​ளது.

செங்​கல்​பட்டு மாவட்​டம், மது​ராந்​தகம் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் முதல்​வர் விஜய் பங்​கேற்​கும் சாலைப் பேரணி நிகழ்ச்​சியை முன்​னிட்​டு, நிகழ்ச்சி நடை​பெறும் இடம் மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் பாது​காப்பு ஏற்​பாடு​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

மேலும் முதல்வர் செல்​லும் வழித்​தடம், அவர் தங்​கும் இடம் மற்​றும் வருகை புரி​யும் இடங்​கள் ஆகிய​வற்​றி​லும் பாது​காப்பு நடவடிக்​கைகள் தீவிரப்​படுத்​தப்பட உள்​ளன.

இதன் ஒரு பகு​தி​யாக, முதல்​வரின் வருகை மற்​றும் நிகழ்ச்சி நடை​பெறும் பகு​தி​களை தற்​காலிக​மாக ‘ரெட் சோன்’ பகு​தி​களாக அறி​வித்​து, அந்​தப் பகு​தி​களில் ட்ரோன் உள்​ளிட்ட சிவில் ரிமோட்லி பைலட்​டட் ஏர்​கி​ராஃப்ட் சிஸ்​டம் (RPAS) இயக்​கு​வதற்​கும், பறக்​க​விடு​வதற்​கும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே பாது​காப்பு நடவடிக்​கைகளுக்கு முழு ஒத்​துழைப்பு வழங்​கும் வகை​யில், மேற்​கண்ட பகு​தி​களில் உள்ள பொது​மக்​கள், நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்​கள், ஊடகத்​தினர் மற்​றும் ட்ரோன் பயன்​படுத்​தும் பிற நபர்​கள் இந்​தத் தடையை கடைபிடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here