குமரி மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிக்காக உழைக்க வேண்டும் – டாக்டர் சஜின் ஜெகேஷ் வேண்டுகோள்

0
19

நாகர்கோவில், மார்ச் 30: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், கன்னியாகுமரி வேட்பாளர் மகேஷ், பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட், விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக கிழக்கு மாவட்ட அயலக அணி மாவட்ட தலைவர் டாக்டர் சுஜின் ஜெகேஷ் விடுத்துள்ள அறிக்கை: தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள வேட்பாளர்களை வெற்றிபெறசெய்வதே ஒவ்வொரு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் தலையாய கடமை. குமரி மாவட்டத்தில் 5 தொகுதிக ளில் பாஜ களம் காண்கிறது. இம்மாவட்டம் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு, சமத்துவ பூமியாய் யாய் விளங் குகிறது. இதற்கு கேடு விளைவிக்கும் வண்ணம் பாஜ பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கிறது.

19 8 2 ம் ஆண்டு நடந்த மண்டைக்காடு கலவரத்தை யாரும் மறந் திருக்க மாட்டார்கள். அது போன்ற ஒரு சூழ்ச்சியை பாஜ தனது வெற்றிக்காக குமரி மாவட்டத்தில் கட்டவிழ்த்து விட முனைப்புடன் செயல் பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள். தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், 6 சட்ட மன்ற தொகுதிகளிலும் வெற்றிக்காக பாடுபட வேண்டும்.

திமுக ஆட்சியில் நூற்றுக்கணக்கான நலத் திட்டங்கள் முதலமைச்சரால் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை நாம் இல்லந்தோறும் சென்று, பரப்புரை செய்து, குமரி மாவட்டத்தில் 6 சட்ட மன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here