Home மாநில செய்திகள் திண்டுக்கல் – பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை பணி 90% நிறைவு: ஜனவரியில் பயன்பாட்டுக்கு வருகிறது

திண்டுக்கல் – பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை பணி 90% நிறைவு: ஜனவரியில் பயன்பாட்டுக்கு வருகிறது

0

திண்டுக்கல்-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை அமைக் கும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் 2027 ஜனவரி மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர தேசிய நெடுஞ் சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் ‘பாரத் மாலா பிரயோஜனா’ திட்டத்தின் கீழ் திண்டுக்கல் காமலாபுரம்-பொள்ளாச்சி வரை நான்குவழிச் சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2019 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

பொள்ளாச்சி-மடத்துக்குளம், மடத்துக்குளம்-ஒட்டன்சத்திரம், ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் காமலாபுரம் வரை என 3 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 131.96 கி.மீ. தூரத்துக்கு ரூ.3,649 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதில் பல இடங்களில் சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஒட்டன்சத்திரம் லெக்கையன்கோட்டை முதல் புதுச்சத்திரம் வரை 3 இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.

ஒட்டன்சத்திரத்தில் இருந்து கன்னிவாடி வழியாக காமலா புரம் செல்லும் சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. நான்கு வழிச்சாலை திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் பயன்பாட்டுக்கு வரும் முன்பே பணிகள் நிறைவடைந்த பகுதி வழியாக மதுரை, திண்டுக்கல்லில் இருந்தும் பொள்ளாச்சிக்கும், பொள்ளாச்சியில் இருந்து ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரைக்கும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகி ன்றன.

2027 ஜனவரி மாதத் துக்குள் அனைத்து பணி களையும் முடித்து பயன்பாட்டு கொண்டுவர தேசிய நெடுஞ் சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.

இதையொட்டி, சாலைப் பணிகள் நிறைவடைந்த பகுதியில் மின் விளக்குகள், தடுப்பு வேலிகள் அமைப்பது, எல்லைக் கோடுகள் வரைதல் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version