கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட ஸ்காட் குறுக்குத் தெருவில் ரூ. 5 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியை நேற்று மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து 27-வது வார்டுக்குட்பட்ட நடராஜபுரம் பிள்ளையார் கோவில் அருகே ரூ. 2½ லட்சத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, 26-வது வார்டுக்குட்பட்ட குருப்புகோட்டைத் தெருவில் ரூ. 10 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி நலஅலுவலர் ஆல்பர் மதியரசு, உதவிச் செயற்பொறியாளர் ரகுராமன், சுகாதார அலுவலர் ராஜா மற்றும் தி.மு.க. மாநகரச் செயலாளர் ஆனந்த் உள்பட பலர் இருந்தனர்.














