24 மணி நேர பணியை ரத்து செய்துவிட்டு மருத்துவர்களுக்கு ஷிப்ட் முறை கொண்டுவர வலியுறுத்தல்

0
17

தூத்​துக்​குடி ஏரல் அரசு மருத்​து​வ​மனை​யில் நள்ளிரவில் ஆய்வு செய்த ஸ்ரீவை​குண்​டம் எம்​எல்ஏ சரவணன், ஓய்வில் இருந்த மருத்​து​வரிடம், 24 மணி நேர பணி​யில் மருத்​து​வர் இல்​லாமல் இருந்​தால் நோயாளி​களுக்கு எப்​படி சிகிச்சை அளிக்க முடி​யும் என்று கேள்வி எழுப்​பி​யதற்கு அரசு மருத்​து​வர்​கள் கண்டனம் தெரி​வித்து வரு​கின்​றனர்.

அரசு மருத்​து​வர்​கள், பட்​ட மேற்​படிப்பு மாணவர்​கள் சங்​கம்: 24 மணி நேர பணி குறித்து தமிழக சுகா​தா​ரத்​துறை எந்த அரசாணை​யும் வெளி​யிட​வில்​லை. தூத்​துக்​குடி ஏரல் அரசு மருத்​து​வ​மனை​யில் தனது பணி அறை​யில் தங்கியிருந்​த​போது, வந்த செவிலியரின் தொலைபேசி அழைப்​பை​ ஏற்று மருத்​து​வர் வந்துள்ளார். நோயாளி எவரும் இல்​லாத​தால் அவருடைய பணி அறையை மூடி உள்​பக்​கம் தாழிட்டு ஓய்​வில் இருந்தார். அரசு மருத்​து​வ​மனை மருத்​து​வர்​களுக்கு உள்ள 24 மணி நேர பணி முறையை ரத்து செய்து, உடனடி​யாக ஷிப்ட் முறையை கொண்டுவர வேண்​டும்.

தமிழ்​நாடு மருத்​துவ அலு​வலர்​கள் சங்​கம்: ஏரல் அரசு மருத்​து​வ​மனை​யில் 24 மணி நேர பணி​யில் இருந்த மருத்​து​வரை, பொது​வெளி​யில் குற்​றம்​சாட்​டும் வகை​யில் மக்​கள் பிர​தி​நிதி ஒரு​வரே தவறாக சித்​தரித்த சம்​பவம் கண்​டிக்​கத்​தக்​கது. அவசரநிலைகளில் பணி மருத்​து​வர் உடனடி​யாக பணிக்கு வரத் தயா​ராக இருக்​கும் நிலை​யில், ஒதுக்​கப்​பட்ட பணி​யாளர் ஓய்வு அறை​யில் ஓய்​வெடுப்​பது அலட்​சி​யம் அல்ல. அதனால், மருத்​து​வர்​களுக்கு ஷிப்ட் பணியை நடை​முறைப்​படுத்த தகுந்த வழி​காட்​டு​தல்களை வழங்க வேண்​டும்.

அரசாணை 113-ல் குறை​பாடு: அரசு மருத்​து​வர்​கள் மற்​றும் பட்​டமேற்​படிப்பு மாணவர்​கள் சங்​கத்​தினர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், “மருத்​துவ சேவை​கள் இயக்​குநரகத்​தின் (டிஎம்​எஸ்) கீழ் உள்ள அரசு மருத்​து​வ​மனை​களில் புதிய பணி​யிடங்​களை உரு​வாக்​காமல், மருத்​து​வர்​களை மாற்று நிர​வல் செய்​யும் வகை​யில் அரசாணை 113 வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதனால், 70 சதவீத அரசு மருத்​து​வ​மனை​களில், அனு​ம​திக்​கப்​பட்ட மருத்​து​வர் பணி​யிடங்​கள் குறைக்​கப்​பட்​டுள்​ளன. நோயாளி​களின் எண்​ணிக்கை, சிறப்பு சேவை​களின் அடிப்​படை​யில் புதிய பணி​யிடங்​கள் உரு​வாக்​கப்​படும் என சுகா​தா​ரத் துறை அமைச்​சர் உறு​தி​யளித்​தும் நிறைவேற்​ற​வில்​லை. தமிழக முதல்​வர் மற்​றும் சுகா​தா​ரத் துறை அமைச்​சர் இதில் உடனடி​யாகத் தலை​யிட்டு அரசாணை 113-ல் உள்ள குறை​பாடு​களைச் சரிசெய்ய வேண்​டும்​” என்​று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here