Home மாநில செய்திகள் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் மின்னணு சரிபார்ப்புக்கான அவகாசம் ஆக.31 வரை நீட்டிப்பு

காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் மின்னணு சரிபார்ப்புக்கான அவகாசம் ஆக.31 வரை நீட்டிப்பு

0

தமிழகம் முழு​வதும் சமையல் எரி​வாயு சிலிண்​டர் வாடிக்​கை​யாளர்​களின் ‘இ-கேஒய்​சி’ மின்​னணு சரி​பார்ப்​புக்​கான அவகாசம் ஆக.31-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இதை செய்​யா​விட்​டால், மானி​யத் தொகை ரத்து செய்​யப்​படும். புதிய சிலிண்​டர் முன்​பதிவு ஏற்​கப்​ப​டாது என்று அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இந்​தி​யன் ஆயில், பாரத் பெட்​ரோலி​யம், இந்​துஸ்​தான் பெட்​ரோலி​யம் ஆகிய பொதுத் துறை எண்​ணெய் நிறு​வனங்​கள் வாடிக்​கை​யாளர்​களுக்கு 14.20 கிலோ எடை​யில் சமையல் எரி​வாயு சிலிண்​டர்​களை விநி​யோகம் செய்​கின்றன.

முறை​கே​டான எரி​வாயு இணைப்​பு​களைக் கண்​டறிய​வும், மானி​யம் தவறாகப் பயன்​படுத்​தப்​படு​வதை தடுக்​கும் வகை​யிலும் ‘இ-கேஒய்​சி’ (e-KYC) எனும் மின்​னணு சரி​பார்ப்பை மேற்​கொள்ள, வாடிக்​கை​யாளர்​களுக்கு பொதுத் துறை எண்​ணெய் நிறு​வனங்​கள் அறி​வுறுத்தி உள்​ளன.

சிலிண்​டர் இணைப்பு யார் பெயரில் உள்​ளதோ அவர் சம்​பந்​தப்​பட்ட சிலிண்​டர் விநி​யோக ஏஜென்சி அலு​வல​கத்​துக்கு நேரில் சென்​று, எண்​ணெய் நிறு​வனங்​களின் மொபைல் செயலி​யில், விவரங்​களை பதிவு செய்ய வேண்​டும். இதன்​மூலம் வாடிக்​கை​யாளரின் உண்​மைத் தன்மை சரி​பார்க்​கப்​பட்​டு, உறுதி செய்​யப்​படும். ஏற்​கெனவே, மின்​னணு சரி​பார்ப்​புக்​கான கடைசி தேதி ஆக.16-ம் தேதி என்று அறிவிக்​கப்​பட்​டது. வாடிக்​கை​யாளர்​கள் வசதிக்​காக, ஆக.23-ம் தேதி (நேற்​று) வரை நீட்​டிப்பு செய்​யப்​பட்​டது.

கடந்த வாரம் வரை தமிழகம் முழு​வதும் 93 சதவீதம் பேர் சரி​பார்ப்பை நிறைவு செய்​துள்​ளனர். இந்​நிலை​யில், மீத​முள்ள வாடிக்​கை​யாளர்​களும் சரி​பார்ப்பை நிறைவு செய்ய வசதி​யாக, மின்​னணு சரி​பார்ப்​புக்​கான அவகாசம் ஆக.31-ம் தேதி நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து எண்​ணெய் நிறுவன அதி​காரி​கள் கூறிய​போது, “அனைத்து வாடிக்​கை​யாளர்​களும் சரி​பார்ப்பை நிறைவு செய்ய வேண்​டும் என்ற நோக்​கில் இதற்​கான அவகாசம் தற்​போது ஆக.31-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இ-கேஒய்சி நடை​முறையை நிறைவு செய்​யா​விட்​டால், மானி​யத் தொகை ரத்து செய்​யப்​படும். புதிய சிலிண்​டர் முன்​ப​திவு செய்​யும்​போது, கணக்கு முடக்​கப்​பட்​ட​தாகக் காண்​பித்​து, முன்​ப​திவு நிராகரிக்​கப்​பட​வும்​ வாய்ப்​பு உள்​ளது” என்​றனர்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version