கேரளாவை உலுக்கிய மெர்சிடிஸ் கார் விபத்தில் உயிரிழந்தவரின் ஓட்டலை ஏற்று நடத்தும் மகள்

0
21

கேரள மாநிலம், கொச்​சி​யில் கடந்த 26 ஆண்​டுகளாக ‘ ஸ்ரீ கிருஷ்ணா டீ ஸ்​டால்’ என்ற பெயரில் தேநீர், தோசை, ஆம்​லெட் உள்​ளிட்ட உணவுப் பொருள்​களை விற்​பனை செய்து வந்​தவர் ஜெயபால​கிருஷ்​ணன்.

கடந்த அக்​டோபர் மாதம் 17 வயது சிறு​வன் அதிவேகத்​தில் ஓட்டி வந்த மெர்​சி​டிஸ் பென்ஸ் கார் மோதி​யதில் ஜெயபால​கிருஷ்​ணன் உயி​ரிழந்​தார். இதையடுத்து அந்த சிறு​வன், அவனது தந்​தையான கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஆகியோர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது.

இதற்​கிடையே, ஹைத​ரா​பாத்தில் உணவுப் பொருள்​களின் தர ஆய்​வாளராகப் பணி​யாற்றி வந்த ஜெயபால​கிருஷ்ணனின் மகள் பத்ரா கீர்த்தி, குடும்​பத்​தின் பொருளாதார நிலை​யைச் சமாளிப்​ப​தற்​காக தந்​தையின் ஓட்​டலை மீண்​டும் திறந்து நடத்தி வரு​கிறார். இது​குறித்து, அவர் கூறும்​போது, “தற்​போது எங்​கள் குடும்​பத்​துக்கு இந்​தக் கடை மட்​டுமே முக்​கிய வரு​மானமாக உள்​ளது.

எனது சம்​பளத்தை மட்​டும் வைத்து குடும்​பத்​தின் மாதாந்​திர செலவு​களைச் சமாளிக்க முடி​யாது. மேலும், இந்த 26 ஆண்டுகாலக் கடையுடன் எனக்கு உணர்​வு​ப்​பூர்​வ​மான தொடர்பு உள்​ளது. இந்தக் கடையை மூடி​விட முடி​யாது. நாங்​கள் நீதிக்​காக போராடி வருகிறோம். ஒருநாள் நிச்சயம் நீதி கிடைக்​கும் என்று நம்​பு​கிறேன். நீதிக்​காக உச்சநீதி​மன்​றம் வரை சென்று போராடுவோம்” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here