ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜூன் முதல் வாரத்தில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த இரு சுற்றுப்பயணத்துக்கான ஆஸ்திரேலிய அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான பாட் கம்மின்ஸ் , மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஐபிஎல் தொடரில் வெவ்வேறு அணிகளில் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.















