திங்கள்சந்தை அருகே பைக் மோதி தம்பதி படுகாயம்

0
309

வாணியக்குடி அருகே உள்ள புதுகுடியிருப்புவிளை பகுதியைச் சேர்த்தவர் மல்கியா. இவரது மனைவி வில்லி சுகிர்தா. நேற்று முன்தினம் (செப்.21) மாலை மகளைப் பார்க்க இருவரும் பைக்கில் சென்றனர். அப்போது மகள் வீட்டு முன்பு ஓரமாக பைக்கை நிறுத்திய நிலையில் லில்லி சுகிர்தா இறங்கினார். மல்கியா இறங்க முயன்ற போது,  நாகர்கோவிலில் இருந்து ஒரே பைக்கில் வந்த அஸ்வின், ஜினு, முகேஷ் ஆகிய 3 வாலிபர்கள் அசுர வேகத்தில் மல்கியா பைக் மீது பயங்கரமாக மோதியுள்ளனர்.

இந்த விபத்தில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட மல்கியாவுக்கு இடது கை மற்றும் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. வில்லி சுகிர்தா காலிலும் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த தம்பதியை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டம் காஞ்சிரகோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மல்கியா கொடுத்த புகாரின் பேரில், பைக்கை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய திருவிதாங்கோடு முகமாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆன்டனி மகன் அஸ்வின் (18) என்பவர்மீது இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here