ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, குழித்துறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று மாலை களியக்காவிளை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. களியக்காவிளை போலீசார் மேல்புறம் வட்டாரத் தலைவர் ரவிசங்கர், காங்கிரஸ் தலைவர் திபாகர் உள்ளிட்ட 100 பேரை கைது செய்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.














