Home கன்னியாகுமரி செய்திகள் நடுக்கடலில் தகராறு: வாணியக்குடி மீனவா்கள் 200 போ் மீது வழக்கு

நடுக்கடலில் தகராறு: வாணியக்குடி மீனவா்கள் 200 போ் மீது வழக்கு

0
கேரள பதிவு கொண்ட விசைப்படகுகளில் மீன்பிடித்த விவகாரத்தில் வாணியக்குடி மீனவர்கள் 200 பேர் மீது வழக்குப்பதிவு
கேரள பதிவு கொண்ட விசைப்படகுகளில் மீன்பிடித்தது தொடர்பான பிரச்னையில் வாணியக்குடியைச் சேர்ந்த 200 பேர் மீது குளச்சல் கடலோர பாதுகாப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.


கேரள பதிவு கொண்ட விசைப்படகுகளில் நடுக்கடலில் மீன் பிடிப்பது தொடா்பான பிரச்னையில், வாணியக்குடியைச் சோ்ந்த 200 போ் மீது குளச்சல் கடலோர பாதுகாப்பு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வாணியக்குடி விசைப்படகு மீனவா்கள் கேளரத்திலுள்ள மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு, கேரள பதிவெண் கொண்ட விசைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா். வாணியக்குடி மீனவா்கள் கேரள பதிவெண் கொண்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க குளச்சல் பகுதிக்கு வருவதற்கு குளச்சல், முட்டம் பகுதிகளை சோ்ந்த மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்த நிலையில் கடந்த அக். 28 ஆம் தேதி இரவு, 7 – க்கும் மேற்பட்ட கேரள பதிவெண் கொண்ட விசைப்படகுகளில் வாணியக்குடி பகுதியைச் சோ்ந்த மீனவா்கள், குளச்சலில் இருந்து தெற்கே 45 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு 20 – க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வந்த குளச்சல், முட்டம் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள், அவா்களைச் சுற்றி வளைத்து, படகிலிருந்த கயிறு, வலைகள் உள்பட ரூ. 53.50 லட்சம் மதிப்பிலான பொருள்களை சேதப்படுத்தினராம். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா், 300 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில் முட்டம் பகுதியைச் சோ்ந்த மீனவா் வின்ஸ் வால்டா் (52), தாங்கள் தாக்கப்பட்டதாக அளித்த புகாரின்பேரில் குளச்சல் கடலோர பாதுகாப்பு போலீஸாா், வாணியக்குடியைச் சோ்ந்த 200 போ் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version