குளச்சல் பகுதியைச் சேர்ந்த 61 வயதான மாற்றுத்திறனாளி ஜோன்ஸ், மண்டைக்காடு சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வேகமாக வந்த வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த ஜோன்ஸ், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குளச்சல் போலீசார், மாற்றுத்திறனாளி மீது மோதிய மர்ம வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
