Home கன்னியாகுமரி செய்திகள் கன்னியாகுமரியில் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த செங்கல் சூளை தொழிலாளர்கள்

கன்னியாகுமரியில் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த செங்கல் சூளை தொழிலாளர்கள்

0
கன்னியாகுமரி மாவட்டத்தில் செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்கப்பட்டதைக் கண்டித்து தொழிலாளர்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட காட்சி
Kumari News – Brick Kiln Workers Protest Against Sealing of Kilns in Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம், திருவட்டார் தாலுகாக்கு உட்பட்ட பூவங்கோடு, பத்மநாபபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளை கடந்த 3 மாதமாக அதிகாரிகள் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் சீல் வைத்து வருகின்றனர்.

இதனால் செங்கல் சூழை தொழிலை நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சீல் வைக்கப்பபட்ட செங்கல் சூளைகளை இயங்க அனுமதி வழங்க வேண்டும் என கூறி 500க்கும் மேற்பட்டோர் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்ததனர்.

சீல் வைத்ததற்கான காரணம் அதிகாரிகள் சொல்லாமல் திடீர் திடீரென வந்து சீல் வைப்பதாகவும் காரணம் கேட்டால் அதிகாரிகள் எந்த வீத பதிலும் கூறாமல் செல்வதாகவும் குற்றம் சாட்டினர். எனவே சீல் வைத்த சூளைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் அனைத்து அரசியல் கட்சிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடும் என்று செங்கல் சூளை தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேட்டு கண்ணீருடன் கலெக்டர் அலுவலகத்திற் குள் குவிந்ததால் அங்கு பரபரப்பும் நெகிழ்ச்சியும் சோகமும் ஏற்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version