Home கன்னியாகுமரி செய்திகள் குளச்சல் அருகே 17 வயது கல்லூரி மாணவி கர்ப்பம்: மாணவர் மீது போக்சோ வழக்குப்பதிவு!

குளச்சல் அருகே 17 வயது கல்லூரி மாணவி கர்ப்பம்: மாணவர் மீது போக்சோ வழக்குப்பதிவு!

0
குளச்சல் அருகே 17 வயது மாணவி கர்ப்பமான சம்பவம் தொடர்பாக குளச்சல் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
குளச்சல் அருகே 17 வயது கல்லூரி மாணவி கர்ப்பமானது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து மாணவர் மீது குளச்சல் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயிற்றுவலிக்காக சிகிச்சைக்காக சென்றபோது ‘குட்டு’ அம்பலம் – மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது வழக்கு.

குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனை பெற்றோரிடம் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது, அந்த மாணவி கர்ப்பமாக இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.

இதனைக் கேட்டு பெற்றோர் துடிதுடித்து போனார்கள். இதுபற்றி கேட்டபோது, பள்ளியில் படித்தபோதே மாணவர் ஒருவருடன் நெருங்கி பழகியுள்ளார். அந்த மாணவருடன் தற்போது ஒரே கல்லூரியிலும் படித்து வருகிறார்.

இந்த நிலையில் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்ததால் மாணவி கர்ப்பமானது தெரியவந்தது.

இதுகுறித்து டாக்டர்கள், குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்தனர்.

பிறகு குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாணவன் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version