காப்பிக்காட்டில் தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம் அதன் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் பேராசிரியர் சஜீவ் அனைவரையும் வரவேற்றார். ‘தொல்காப்பியத்தில் அறம்’ என்னும் தலைப்பில் தலைவர் பாஸ்கரன் உரை நிகழ்த்தினார். ‘பெரியோர் ஒழுக்கம் பெரிது எனக்கிளந்து’ என்னும் நூற்பா வழி, பண்பும், ஒழுக்கமும் உள்ள உயர்ந்தவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளைப் பின்பற்றி நடந்தால், வீடும், நாடும் நல்ல வழியில் செல்லும் என்னும் கருத்தை வலியுறுத்தினார். கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் ரெவிந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.














