4-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் களமிறங்குகிறது இந்திய அணி

0
37

இந்​தியா – நியூஸிலாந்து அணிகள் இடை​யி​லான 4-வது ஒருநாள் கிரிக்​கெட் போட்டி மவுண்ட்​மவுங்​க​னி​யில் உள்ள பே ஓவல் மைதானத்​தில் இன்று காலை 7.30 மணிக்கு நடை​பெறுகிறது.

இரு அணிகள் இடை​யி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் முதல் 2 ஆட்​டங்​களி​லும் இந்​திய அணி வெற்றி கண்​டிருந்​தது. ஹாமில்​டனில் நடை​பெற இருந்த 3-வது ஆட்​டம் மழை காரண​மாக ரத்து செய்​யப்​பட்​டது. தொடரில் இந்​திய அணி 2-0 என முன்​னிலை வகிக்​கும் நிலை​யில் பே ஓவல் மைதானத்​தில் இன்று 4-வது ஒருநாள் போட்டி நடை​பெறுகிறது.

இன்​றைய ஆட்​டத்​தில் இந்​திய அணி வெற்றி பெறும் பட்​சத்​தில் தொடரை கைப்​பற்​றும். அதேவேளை​யில் நியூஸிலாந்து அணி இன்​றைய ஆட்​டத்​திலும் கடைசி ஆட்​டத்​திலும் வெற்றி பெற்​றாலும் தொடரை சமன் செய்ய மட்​டுமே முடியும். முதல் 3 போட்​டிகளி​லும் விளை​யாடிய கேப்​டன் ஷுப்​மன் கில், கே.எல்.ராகுல், அன்​ஷுல் கம்​போஜ் ஆகியோர் டெஸ்ட் போட்​டிக்கு தயாராகு​வதற்​காக ஒருநாள் போட்​டிக்​கான அணி​யில் இருந்து விலகி உள்​ளனர்.

இத​னால் இன்​றைய ஆட்​டத்​தில் இந்​திய அணியை ஸ்ரேயஸ் ஐயர் வழிநடத்த உள்​ளார். ஒருநாள் போட்​டி​யில் அவர், கேப்​டனாக செயல்​பட உள்​ளது இதுவே முதன்​முறை​யாகும். நடப்பு தொடரில் ஸ்ரேயஸ் ஐயர் ஷார்ட் பாலில் ஆட்​ட​மிழப்​பது பல​வீனமாக இருந்து வரு​கிறது. இதற்கு இன்​றைய ஆட்​டத்​தில் அவர், தீர்வு காண முயற்​சிக்​கக்​கூடும்.

ஷுப்​மன் கில் உள்​ளிட்ட 3 பேர் இல்​லாததால் ருதுராஜ் கெய்க்​வாட், இஷான் கிஷன், முகமது சிராஜ் ஆகியோர் விளை​யாடும் லெவனில் இடம் பெறு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ரோஹித் சர்மா நடப்பு தொடரில் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​த​வில்லை. முதல் ஆட்​டத்​தில் ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்த அவர், 2-வது ஆட்​டத்​தில் 23 ரன்​கள் மட்​டுமே எடுத்​தார். நியூஸிலாந்து மண்​ணில் அவர், இது​வரை சதம் விளாசி​யது இல்லை. அந்த வறட்​சியை இன்​றைய ஆட்​டத்​தில் போக்​கு​வதற்​கான வழிகளை ரோஹித் சர்மா கண்​டறிய முயற்​சிக்​கக்​கூடும்.

தொடக்க வீரராக ரோஹித் சர்​மாவுடன், விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்மேனான இஷான் கிஷன் களமிறங்க அதிக வாய்ப்​பு​ உள்​ளது. ருதுராஜ் கெய்க்​வாட் மிடில் ஆர்​டரில் கிடைக்​கும் வாய்ப்பை முழு​மையாகப் பயன்​படுத்​திக் கொள்ள முயற்​சிப்​பார். பந்​து​வீச்​சைப் பொறுத்​தவரையில் அன்​ஷுல் கம்​போஜ் இடத்​தில் முகமது களமிறங்​கக்​கூடும். கடந்த 3 மாதங்​களாக சிராஜ் தனது வழக்​க​மான சிறப்​பான செயல் திறனை வெளிப்​படுத்​த​வில்லை. இருப்​பினும், கடந்த வாரம் இந்​தியா ‘ஏ’ அணிக்​காக விளை​யாடிய 4 நாள் பயிற்சி ஆட்​டத்​தில் 4 விக்​கெட்​களைக் கைப்​பற்​றியது அவருக்கு நம்​பிக்​கையை அளிக்​கக்​கூடும்.

மிட்​செல் சாண்ட்​னர் தலை​மையி​லான நியூஸிலாந்து அணி வெற்றி பெற்​றாக வேண்​டிய நெருக்​கடி​யில் களமிறங்​கு​கிறது. ஏனெனில் இன்​றைய ஆட்​டத்​தில் தோல்வி அடைந்​தால் தொடரை இழக்க நேரிடும். டெஸ்ட் தொடரை கருத்​தில் கொண்டு அந்த அணி​யில் முன்​னணி வீரர்​களான டாம் லேதம், டேரில் மிட்​செல், கிளென் பிலிப்ஸ், நேதன் ஸ்மித், ஹென்றி நிக்​கோல்ஸ் ஆகியோர் ஒருநாள் போட்​டிக்​கான அணி​யில் இருந்து விலகி உள்​ளனர். உள்​நாட்​டுப் போட்​டிகளில் சிறப்​பாகச் செயல்​பட்ட பிரெட் ராண்​டல் அறி​முக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here