Home சினிமா செய்திகள் தோல்விக்குப் பிறகு அடுத்தடுத்த படங்களை கவனத்துடன் தேர்வு செய்யும் சிரஞ்சீவி!

தோல்விக்குப் பிறகு அடுத்தடுத்த படங்களை கவனத்துடன் தேர்வு செய்யும் சிரஞ்சீவி!

0

சீரஞ்சிவி தான் நடிக்கவுள்ள அடுத்த படங்களை கவனத்துடன் தேர்வு செய்து வருகிறார்.

‘போலா ஷங்கர்’ படத்தின் தோல்விக்குப் பிறகு தனது அடுத்த படங்களின் தேர்வில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சீரஞ்சிவி. தற்போது ‘விஸ்வாம்பரா’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதனை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்துக்குப் பிறகு தனது அடுத்த படம் என்ன என்பதை தேர்வு செய்யாமலேயே இருந்தார். தற்போது ‘விஸ்வாம்பரா’ படத்துக்குப் பிறகு அனில் ரவிப்புடி இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இவர் இயக்கிய அனைத்து படங்களுமே வெற்றி மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்களும் கவரும் வகையில் இவருடைய படங்கள் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அனில் ரவிப்புடி படத்தை முடித்துவிட்டு, ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் சிரஞ்சீவி. ‘தசரா’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் நானி நடிக்கும் ‘தி பராடைஸ்’ படத்தை இயக்கவுள்ளார் ஸ்ரீகாந்த் ஓடிலா. அந்தப் படத்தை முடித்துவிட்டு சிரஞ்சீவி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

ஸ்ரீகாந்த் ஓடிலா தீவிர சீரஞ்சிவி ரசிகர். இதனை பல மேடைகளில் வெளிப்படுத்தி இருக்கிறார். அவரே சீரஞ்சிவியை இயக்க இருப்பதை பலரும் மகிழ்ச்சியாக பார்க்கிறார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version