385 போலீஸாருக்கு முதல்வர் காவல் பதக்கங்கள்: சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வழங்கினார்

0
36

சென்​னை​யில் 385 போலீ​ஸாருக்கு முதல்வர் காவல் பதக்​கங்​களை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் வழங்கினார்.

காவல் துறை​யில் 10 ஆண்​டுகள் எவ்​வித தண்​டனையும் இன்றி சிறப்​பாக பணி​யாற்​றிய​வர்​களுக்கு ஆண்​டுதோறும் முதல்​வர் காவல் பதக்​கம் வழங்​கப்​படு​கிறது.

அதன்​படி, சட்​டம் – ஒழுங்கு, குற்​றப்​பி​ரி​வில் 221 பேர், போக்​கு​வரத்து பிரி​வில் 102 பேர், சிறப்பு பிரிவு​களில் 62 பேர் என மொத்​தம் 385 பேருக்கு எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற விழா​வில், சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் பதக்​கங்​களை வழங்​கினார்.

அவர் பேசும்​போது, “காவல் துறை​யினர் நேர்மை, ஒழுக்​கம், அர்ப்​பணிப்பு உணர்​வுடன் பணி​யாற்ற வேண்​டும். நவீன தொழில்​நுட்ப வளர்ச்​சிக்கு ஏற்ப தங்​களை மேம்​படுத்​திக் கொள்ள வேண்​டும். மக்​களிடம் அச்​சத்தை ஏற்​படுத்​தாமல் நம்​பிக்​கையை உரு​வாக்​கும் வகை​யில் மனிதநேயத்​துடன் பணி​யாற்ற வேண்​டும்” என்று அறி​வுறுத்​தினார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது 18 சிறுமிகள் புகார் கொடுத்​துள்​ளனர்.

இது ​தொடர்​பாக அவர்​மீது 8 போக்சோ வழக்​கு​கள், ஒரு சிறுமி தற்​கொலை வழக்கு என மொத்​தம் 9 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. அதில் 2 வழக்​குளில் குற்​றப்​பத்​தி​ரிகை தாக்​கல் செய்​து​விட்​டோம். மற்ற வழக்​கு​களி​லும் விரைவில் தாக்​கல் செய்​யப்​படும்.

முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் மீதான வழக்கு விசா​ரணை கிட்​டத்​தட்ட முடியும் நிலை​யில் உள்​ளது. சம்​பந்​தப்​பட்ட குற்​றவாளி​கள் அனைவரும் கைது செய்​யப்​பட்டு விட்​டனர். இன்​னும் 15 நாட்​களில் குற்​றப்​பத்​தி​ரிகை தாக்​கல் செய்​யப்​படும்.

போதைப் பொருள் ஒழிப்​பில் சென்னை காவல் துறை சிறப்​பாக செயல்​படு​கிறது. கடந்த 3 ஆண்​டுகளை​விட, இந்த ஆண்​டில் இது​வரை அதிக அளவில் போதைப் பொருள் வழக்​கு​களை பதிவு செய்​துள்​ளோம்.

போதைப் பொருட்​களும் அதிக அளவில் கைப்​பற்​றப்​பட்டு, குற்​றவாளி​களும் அதிக அளவில் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இந்த மாத முடி​வில் இது​ தொடர்​பான முழு விவரங்​களும் வெளி​யிடப்​படும்.

போதை மாத்​திரை, போதை ஸ்​டாம்ப் விற்ற கும்​பலைச் சேர்ந்த சிலர் சென்​னை​யில் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அதில் முக்​கிய குற்​றவாளி ஒரு​வரை தெலங்​கானா மாநிலம் ஹைத​ரா​பாத்​தில் சென்னை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

சென்​னை​யில் சிங்​கப்​பெண் சிறப்பு படை போலீ​ஸாரும் சிறப்​பாக செயல்​பட்டு வரு​கின்​றனர். இவ்​வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்​வில் போக்​கு​வரத்து காவல் கூடுதல் ஆணை​யர் சாமுண்​டீஸ்வரி, இணை ஆணை​யர் உமா, துணை ஆணை​யர் ஜெயகரன் உள்​ளிட்ட போலீஸ் அதி​காரி​களும், முதல்​வர் விருது பெற்ற போலீ​ஸாரின் குடும்​பத்​தினர் ஏராளமானோர் கலந்​து​கொண்​டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here