100 நாள் சாதனையை கடந்து நூற்றாண்டு போற்றும் சாதனைகளை முதல்வர் விஜய் படைப்பார்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் புகழாரம்

0
28

நூறு நாள் சாதனையை கடந்​து, நூற்​றாண்டு போற்​றும் சாதனை​களை முதல்​வர் விஜய் படைப்​பார் என்று சட்​டப்​பேர​வை​யில் நேற்று பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகர் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் 4 நாட்​கள் விடு​முறைக்கு பின் துறை​கள் தோறும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று தொடங்​கியது.

அப்​போது, தவெக அரசு 100 நாட்​களை நிறைவு செய்​திருப்​பது தொடர்​பாக பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகர் பேசி​ய​தாவது: மதச்​சார்​பற்ற, சமூகநீதி காக்​கும் முதல்​வர் விஜய்​யின் பொற்​கால அரசு பொறுப்​பேற்று 100 நாட்​களை கம்​பீர​மாக நிறைவு செய்​துள்​ளது.

அரசின் இந்த முதல் 100 நாட்​கள் என்​பது நாட்​காட்​டி​யில் கடந்து செல்​லும் நாட்​கள் அல்ல, தமிழக வரலாற்​றில் பொறிக்​கப்​பட்ட ஒரு வரலாற்று மாற்​றம். வாக்​குறுதி என்​பது தேர்​தலுக்​கான வார்த்தை அல்ல.

அது மக்​களுக்​கான பொறுப்பு என்​பதை உணர்ந்து செயல்​படும் இந்த அரசு, முதல் நாளி​லிருந்து மக்​களின் நாடித் துடிப்பு அறிந்​து, புதிய சிந்​தனை​யுடன் களமிறங்கி முதல் 100 நாட்​கள் பல்​வேறு துறை​களில் செயல்​படுத்​திய பணிகள் பாராட்​டுக்​குரிய​வை.

ஏழை மக்​களின் நலன் காக்​கும் வகை​யிலும், பெண்​களின் பாது​காப்பை உறுதி செய்​யும் வகை​யிலும், இளைஞர்​களின் எதிர்​காலத்தை மேம்​படுத்​தும் நோக்​கிலும் பெண்​கள் பாது​காப்​புக்​காக சிங்​கப்​பெண் சிறப்பு படை, ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் 200 யூனிட் வரையி​லான இலவச மின்​சா​ரம், கூட்​டுறவு வங்​கி​களில் விவ​சா​யிகள் பெற்​றிருந்த ரூ.6 ஆயிரம் கோடி பயிர்​ககடன் தள்​ளு​படி, வீடற்​றோருக்​கான வெற்றி வீடு திட்​டம், அண்​ணன் சீர் திட்​டம், தாய் மாமன் தங்க மோதிரம் திட்​டம் என பல்​வேறு அறி​விப்​பு​களை வெளி​யிட்​டு, இது மக்​களுக்​கான அரசு என்​பதை முதல்​வர் நிரூபித்​துள்​ளார்.

இந்த குறுகிய காலத்​துக்​குள் தமிழகத்​தின் மக்​களாட்சி மாண்பை காக்​கும் வகை​யிலும், தமிழக மக்​களின் நீண்​ட​கால கனவை பூர்த்தி செய்​யும் வகை​யிலும் ஊழலற்ற, நேர்​மை​யான, வெளிப்​படை​யான தன்​மையை நிர்​வாகத்​துக்கு வழங்கி வரும் முதல்​வ​ரால் விதைக்​கப்​பட்​டிருக்​கும் திட்​டங்​களின் விதைகள், வரும் ஆண்​டு​களில் தமிழகத்​தின் பொருளா​தார வளர்ச்​சி​யாக​வும், விவ​சா​யிகளின் வளமாக​வும், மாணவர்​கள் கல்வி வாய்ப்​பாக​வும் பொது​மக்​களின் நல்​வாழ்​வுக்​காக மலரும்.

திரை​யுல​கிலும், மக்​கள் மன்​றத்​தி​லும் தொட்​டதெல்​லாம் துலங்​கச் செய்த முதல்​வர், இன்று 100 நாள் சாதனையை கடந்​து, நூற்​றாண்டு போற்​றும் சாதனை​களை படைக்​கப் போகிறார்.

இன்​னும் நூற்​றாண்டு பேசும் சரித்​திரம் படைப்​பார் பல சாதனை திட்​டங்​களை மக்​களுக்கு வழங்​கி, தமிழகத்​தின் உரிமை​களை மீட்​டெடுத்​து, தமிழகத்தை இந்​தி​யா​வின் முதன்மை மாநில​மாக மாற்​றும் தங்​களின் மக்​கள் பணி தொய்​வின்​றி தொடர வாழ்த்​துகிறேன்​. இவ்​வாறு அவர்​ உரை​யாற்​றி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here