உயிரி-எரிவாயு ஆலையில் முதல்வர் விஜய் ஆய்வு

0
33

சேத்​துப்​பட்டில் செயல்​பட்டு வரும் உயி​ரி-எரி​வாயு ஆலை​யைத் முதல்​வர் விஜய் பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார். சென்னை சேத்​துப்​பட்டு பகு​தி​யில் பொது-தனி​யார் பங்​களிப்​புடன் செயல்​பட்டு வரும் உயி​ரி-எரி​வாயு ஆலை​யைத் முதல்​வர் விஜய் பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார்.

சென்​னை​யில் நாள்​தோறும் சேரும் குப்​பைகளில் 3,200 மெட்​ரிக் டன் மக்​கும் குப்​பைகளாக​வும், 2,950 மெட்​ரிக் டன் மக்​காத குப்​பைகளாக​வும் உள்​ளன. இதில் மக்​கும் குப்​பைகளை நவீன தொழில்​நுட்​பத்​தில் இயற்கை எரி​வா​யு​வாக​வும், உராக​வும் மாற்ற வேண்​டும்.

பிளாஸ்​டிக் உள்​ளிட்ட மக்​காத குப்​பைகளைத் தார்ச்​சாலை அமைக்​க​வும், சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக​வும் அனுப்ப வேண்​டும் என முதல்​வர் உத்​தர​விட்​டார்.

சேத்​துப்​பட்டு ஆலை தினசரி 140 மெட்​ரிக் டன் ஈரக்​கழி​வு​களைச் செய​லாக்​கி, 4,900 கிலோ எரி​வா​யுவை உற்​பத்தி செய்​யும் திறன் கொண்​டது. இதே​போல் மாதவரத்​தி​லும் ஓர் ஆலை இயங்கி வரு​கிறது. மாநகரின் உள்​கட்​டமைப்பை வலுப்​படுத்த மேலும் ஐந்து ஆலைகள் நிறு​வப்​பட்டு வரு​கின்​றன.

இப்​பணி​களைச் சென்னை மட்​டுமன்​றி, தமிழகத்​தின் அனைத்து நகர்ப்​புற உள்​ளாட்​சிகளி​லும் குறிப்​பிட்ட காலக்​கெடு​வுக்​குள் அறி​வியல் பூர்​வ​மாகச் செயல்​படுத்த முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here