‘ஜெம்’ வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்: சிறப்பு புலனாய்வு குழு தகவல்

0
37

‘ஜெம்’ கிரானைட்ஸ் வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிராக 9 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கை மூடி மறைத்ததில் காவல் துறை உயர் அதிகாரிகளின் தொடர்பு இருப்பதாலும், லட்சக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதாலும் இந்த வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மேலும் வழக்கு தொடர்பான வீடியோக்கள் ஊடகங்களில் வெளியானது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி ‘துளிர்’ அமைப்பின் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள், நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன், ‘வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இரு வழக்குகளில் 10 நாள்களில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும்’ எனத் தெரிவித்தார்.

மேலும், ‘குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான பிரகாஷ் தலைமறைவாக உள்ளார். அவரது முன் ஜாமீன் மனு, 16-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. பணப்பரிமாற்றம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது

வழக்கின் தீவிரத்தை கருதி, சிறப்பு புலன் விசாரணைக்கு தரப்பில் ஆஜராக மூன்று சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமித்து கடந்த 6-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதி, வழக்குகளின் விசாரணையை நவம்பர் 30-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here