‘தாய் கிழவி’ வெளியீட்டு தேதியில் மாற்றம்

0
285

பிப்ரவரி 27-ம் தேதி ‘தாய் கிழவி’ படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படம் பிப்ரவரி 20-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது ஒரு வாரம் தள்ளி பிப்ரவரி 27-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரியில் படத்தினை வெளியிட்டே ஆகவேண்டிய சூழலில் இருப்பதாகவும், அதற்கு தகுந்தாற் போல் ஒப்பந்தங்கள் இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

’தாய் கிழவி’ படத்தின் பணிகள் அனைத்துமே முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. விரைவில் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு முடிவு செய்திருக்கிறது. இப்படத்தின் ராதிகாவின் லுக், நடை, பேச்சு என அனைத்துக்குமே இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா பணிபுரிந்து வருகிறார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here