புதுக்கடை: தீக்குளித்த வாலிபர் சிகிட்சை பலனின்றி உயிரிழப்பு
புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் பாலையன் (58). கூலித் தொழிலாளி. இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். மகேஸ்வரி மனநிலை பாதிப்பு காரணமாக கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு...
நாகர்கோவில்: புகையிலைப் பொருள் வைத்திருந்தவர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் ஒழுகினசேரி பகுதியில் நேற்று ரோந்து சுற்றி வந்தார். அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த அழகுத்துரை (42) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்திருந்தது...
அருமனை: பைனான்சியர் மர்மமான முறையில் மரணம்
இடைக்கோடு பகுதி புத்தன்சந்தை என்ற இடத்தைச் சேர்ந்தவர் பிரதீப் தாமோதரன் (49). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமான ஒரு வருடத்திலேயே மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் தனியாக...
பேச்சிப்பாறை: தோட்டக்கலை நிலையத்தில் மாணவர்கள் ஆய்வு
ராதாபுரம் தி இந்தியன் வேளாண்மை கல்லூரி 20 மாணவ மாணவிகள் பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்திற்கு பயணம் செய்தனர். அவர்கள் பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தோட்டக்கலை கல்லூரியின் முதல்வர் ஜெயா...
நித்திரவிளை: கடல் மணல் திருட்டு டெம்போவுடன் 2 பேர் கைது
நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியில் மணல் திருட்டில் சிலர் ஈடுபடுவதாக நள்ளிரவில் நித்திரவிளை போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து இரவு ரோந்து அதிகாரி அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்றனர்....
புதுக்கடை: மிரட்டி பணம் பறித்த 8 போலி நிருபர்கள் கைது
புதுக்கடை அருகே விழுந்தயம்பலம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் (35). இவர் பைனான்ஸ் நடத்தி வருகிறார். இவரிடம் சிலர் பத்திரிக்கை நிருபர்கள் என கூறி மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் நேற்று (மார்ச் 3)...
கருங்கல்: சாலையில் வாலிபர்கள் தாக்குதல்; கண்டு கொள்ளாத போலீஸ்
கருங்கல் அருகே மூசாரி என்ற பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பகுதி வழியாக நேற்று (மார்ச் 3) மாலை பள்ளியாடி பகுதியில் இருந்து 2 வாலிபர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
பள்ளி...
குளச்சல்: மீனவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
குளச்சல் அருகே வாணியக்குடி கோவில் மேற்கு தெருவை சேர்ந்தவர் ரெமிஸ்(48). மீன்பிடித் தொழிலாளி. இவருடைய வீட்டுக்கு செல்லும் பாதை சற்று குறுகலாக அமைந்துள்ளதால், இந்த பாதை தொடர்பாக ரெமிசுக்கும் அதே பகுதியை சேர்ந்த...
மண்டைக்காடு: பகவதி அம்மன் கோவில் விழா நாளை துவக்கம்
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கேரளா பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.
ஆண்டுதோறும் இக்கோவில் மாசி கொடை விழா...
இரணியல்: கொத்தனார் மர்ம சாவு; போலீஸ் விசாரணை
இரணியல் அருகே உள்ள பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் மகன் பச்சையம்மால் (29). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது....
















