தவெக எம்எல்ஏ.விடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக வழக்கு: முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனு

0
25

பேர​வைத் தலை​வருக்கு எதி​ராக தீர்​மானம் கொண்​டு​வரும்​போது ஆதர​வாக வாக்​களித்​தால் ரூ.35 கோடி தரு​வ​தாகக்​கூறி தன்​னிடம் திமுக​வினர் குதிரை பேரத்​தில் ஈடு​பட்​ட​தாக தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா அளித்த புகாரின் பேரில் சென்னை அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்த யூடியூபர் திரு​நாவுக்​கரசு உள்​ளிட்ட பலரை போலீஸார் கைது செய்​துள்​ளனர்.

இந்த வழக்​கில் முக்​கிய நபர்​களாகக் கருதப்​படும் செந்​தில் பாலாஜி மற்​றும் அவரது சகோ​தரர் அசோக்​கு​மார் ஆகிய இரு​வருக்​கும் போலீ​ஸார் சம்​மன் அனுப்​பி​யிருந்​தனர்.

இரு​வரும் விசா​ரணைக்கு ஆஜராகாமல் தலைமறை​வாகி​யுள்ள நிலை​யில் அசோக்​கு​மாருக்கு முன்ஜாமீன் கோரி, ஏற்​கெனவே உயர்நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்துள்ளார்.

இந்​நிலை​யில் செந்​தில் பாலாஜிக்​கும் முன்​ஜாமீன் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த மனு விரை​வில் விசா​ரணைக்கு வரவுள்​ளது, இதற்​கிடையே, கோவை தெற்கு தொகு​தி​யில் செந்​தில் பாலாஜி வெற்றி பெற்​றதை எதிர்த்​தும், அத்​தொகுதி தேர்​தல் அதி​காரி மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி​யும் ஈரோட்​டைச் சேர்ந்த பிர​காசம் என்​பவர் சார்​பில் வழக்​கறிஞர் ஆர்​.எம்​.​பாபு முருகவேல், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்​ளார். இந்த மனு​வும்​ விரை​வில்​ வி​சா​ரணைக்​கு வரவுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here